Monday, December 4, 2023
Homeஆன்மிகம்ராசி பலன்கள் 20-10-2022

ராசி பலன்கள் 20-10-2022

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, ஐப்பசி 3 ↓

நாள் – கீழ் நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ தசமி   – oct 19 02:13 pm – oct 20 04:05

கிருஷ்ண பக்ஷ ஏகாதசி   – oct 20 04:05 pm – oct 21 05:23 p

நட்சத்திரம்

ஆயில்யம் – oct 19 08:02 am – oct 20 10:30 pm

மகம் – oct 20 10:30 am – oct 21 12:28 pm

கரணம்

பத்திரை – oct 20 03:13 am – oct 20 04:05

பவம் – oct 20 04:05 pm – oct 21 04:48 a

பாலவம் – oct 21 04:48 am – oct 21 05:23 pm

யோகம்

சுபம் – oct 19 05:32 pm – oct 20 05:52

சுப்ரம் – oct 20 05:52 pm – oct 21 05:47 p

வாரம்

வியாழக்கிழமை

நல்ல நேரம்

காலை : 10.45 முதல் 11.45 மணி

காலை : 12.15 முதல் 01.15 மணி வரை

இரவு : 06.30 முதல் 07.30 மணி வ

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை

குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை

சூலம்: தெற்கு.

பரிகாரம்: தைல

மேஷம் ராசி

திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். சிவவழிபாடு சிரமம் தவிர்க்கும்

💠அஸ்வினி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியு

💠பரணி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு

💠கிருத்திகை

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடு

ரிஷபம் ராசி

இன்று பல வகைகளிலும் அனுகூலமான நாள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். லாபம் வழக்கம்போல் இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்

💠கிருத்திகை

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கு

💠ரோகிணி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்

💠மிருகசீரிடம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியு

மிதுனம் ராசி

இன்று எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள் ளவும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். இன்று கணபதியை வழிபட தடைகள் விலகு

💠மிருகசீரிடம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது

💠திருவாதிரை

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது அவசிய

💠புனர்பூசம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்

கடகம் ராசி

காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சி எடுப்பதற்கு சாதகமான நாள். செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சிறிது அலைச்சல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். கந்தக் கடவுளை வழிபடுவது நன்று

💠புனர்பூசம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவு உண்டாகு

💠பூசம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது

💠ஆயில்யம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகு

சிம்மம் ராசி 

செலவுகள் அதிகரிக்கும் நாள். கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக் குகள் நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சா கமாக உழைத்து விற்பனையை அதிகரிப்பார்கள். சூரியபகவானை வழிபடுவது நன்

💠மகம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவையை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படும்

💠பூரம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியு

💠உத்திரம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்

கன்னி ராசி

தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவு களை பிற்பகலுக்குமேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்

💠உத்திரம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள்சேர்க்கை ஏற்படு

💠அஸ்தம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது

💠சித்திரை

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கு

துலாம் ராசி

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆனால், எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். இன்று சுதர்சன வழிபாடு சுகம் தரு

💠சித்திரை

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்

💠சுவாதி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியு

💠விசாகம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்

விருச்சிகம் ராசி 

வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. இன்று முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு

💠விசாகம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலை கண்டிப்பாகத் தவிர்த்துவிடவு

💠அனுஷம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்

💠கேட்டை

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவு

தனுசு ராசி

 

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிவபெருமானை வழிபடுவது சிறப்

💠மூலம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்

💠பூராடம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்க்கும் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படு

💠உத்திராடம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்

மகரம் ராசி 

புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சில ருக்கு ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பப் பெரியவரின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் எப்போதும்போல் நடை பெறும். இன்று ஆஞ்சநேயரை வழிபட அல்லல்கள் குறையும்

💠உத்திராடம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவ்வப்போது மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கு

💠திருவோணம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்

💠அவிட்டம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியு

கும்பம் ராசி 

பிற்பகலுக்குமேல் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்

💠அவிட்டம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக் கூடும்

💠சதயம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகு

💠பூரட்டாதி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்

மீனம் ராசி

ஏதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். அவர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். நண்பர்களால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சியைத் தொடங்கலாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவது நலம் தரும்

💠பூரட்டாதி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு ஏற்படு

💠உத்திரட்டாதி

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்

💠ரேவதி

நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments