Wednesday, March 22, 2023
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (26-10-2022 )

ராசி பலன்கள் (26-10-2022 )

இன்றைய நாள் 

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, ஐப்பசி 9 ↔

நாள் – சம நோக்கு நாள்

பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ பிரதமை – Oct 25 04:18 PM – Oct 26 02:42 PM

சுக்ல பக்ஷ துவிதியை – Oct 26 02:42 PM – Oct 27 12:45 PM

நட்சத்திரம்

ஸ்வாதி – Oct 25 02:17 PM – Oct 26 01:24 PM

விசாகம் – Oct 26 01:24 PM – Oct 27 12:11 PM

கரணம்

பவம் – Oct 26 03:33 AM – Oct 26 02:42 PM

பாலவம் – Oct 26 02:42 PM – Oct 27 01:46 AM

கௌலவம் – Oct 27 01:46 AM – Oct 27 12:45 PM

யோகம்

ப்ரீதி – Oct 25 12:31 PM – Oct 26 10:08 AM

ஆயுஷ்மான் – Oct 26 10:08 AM – Oct 27 07:27 AM

நட்சத்திரம்

இன்று பிற்பகல் 03.11 மணி வரை சுவாதி. பின்னர் விசாகம்.

நாமயோகம்

இன்று பிற்பகல் 12.21 மணி வரை பிரீதி. பின்பு ஆயுஷ்மான்.

கரணம்

இன்று அதிகாலை 04.53 மணி வரை கிமிஷ்துக்கினம் . பின்னர் மாலை 04.43 வரை பவம். பின்பு பாலவம்.

அமிர்தாதியோகம்

இன்று முழுவதும் சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

சூலம்: வடக்கு.

பரிகாரம்: பால்.

வாரம்

புதன்கிழமை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எந்தவொரு செயல்பாடுகளிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், கலகலப்பான சூழ்நிலையும் ஏற்படும். லாபம் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

⭐அஸ்வினி : உதவி கிடைக்கும்.

⭐பரணி : அனுகூலம் உண்டாகும்.

⭐கிருத்திகை : கலகலப்பான நாள்.
—————————————

ரிஷபம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். இழுபறியாக இருந்துவந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.

⭐ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.

⭐மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
—————————————

மிதுனம்

பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தெளிவான சிந்தனைகளின் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தனவரவு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

⭐மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.

⭐திருவாதிரை : விவாதங்களை தவிர்க்கவும்.

⭐புனர்பூசம் : இலக்குகள் பிறக்கும்.
—————————————

கடகம்

தொழில் சார்ந்த சில முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயமும், அனுபவமும் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். ஆர்வம் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

⭐புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

⭐பூசம் : ஆதாயம் மேம்படும்.

⭐ஆயில்யம் : சோர்வான நாள்.
—————————————

சிம்மம்

புதிய தொழில் நுட்ப பொருட்களை பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் ஆதாயகரமான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எந்தவொரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வரவு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐பூரம் : ஆதாயம் ஏற்படும்.

⭐உத்திரம் : சுறுசுறுப்பான நாள்.
—————————————

கன்னி

வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சுத்திறமை மேம்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஊக்கம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

⭐உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐அஸ்தம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

⭐சித்திரை : இலக்குகள் பிறக்கும்.
—————————————

துலாம்


முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வருத்தம் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐சுவாதி : சிந்தனைகள் உண்டாகும்.

⭐விசாகம் : முன்னேற்றமான நாள்.
—————————————

விருச்சிகம்

எந்தவொரு செயல்பாடுகளிலும் பொறுமையுடன் செயல்படவும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டிகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

⭐விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.

⭐அனுஷம் : முடிவு கிடைக்கும்.

⭐கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
—————————————

தனுசு


வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். கடன் நிமிர்த்தமான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்கள் சார்ந்த முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். முயற்சி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

⭐மூலம் : மதிப்பு மேம்படும்.

⭐பூராடம் : ஆர்வம் உண்டாகும்.

⭐உத்திராடம் : அனுபவம் ஏற்படும்.
—————————————

மகரம்


தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். உறவினர்களின் உதவியால் சில பிரச்சனைகள் குறையும். கடன் சார்ந்த விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐உத்திராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.

⭐திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.

⭐அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.
—————————————

கும்பம்


திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகளை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நிறைவான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

⭐அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.

⭐சதயம் : நிதானம் வேண்டும்.

⭐பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
—————————————

மீனம்

குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். புதிய கருவிகளை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். விரயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

⭐உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

⭐ரேவதி : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments