Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்ராசி பலன்கள் 27-10-2022

ராசி பலன்கள் 27-10-2022

🔔இன்றைய நாள் 🔔

நாள் : சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 27.10.2022

திதி : இன்று மாலை 02.27 மணி வரை துவிதியை. பின்னர் திரிதியை.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.24 மணி வரை விசாகம். பின்னர் அனுஷம்.

நாமயோகம் : இன்று பிற்பகல் 10.06 மணி வரை ஆயுஷ்மான். பின்பு சௌபாக்கியம்.

கரணம் : இன்று அதிகாலை 03.35 மணி வரை பாலவம் . பின்னர் மாலை 02.22 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

காலை : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

சூலம்: தெற்கு.

பரிகாரம்: தைலம்.

🔔இன்றைய ராசி பலன்கள்🔔

மேஷம்

வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் போட்டி அதிகரிக்கும். எந்தவொரு செயல்பாட்டிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கனிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐அஸ்வினி : போட்டி அதிகரிக்கும்.

⭐பரணி : சிந்தித்து செயல்படவும்.

⭐கிருத்திகை : கவனம் வேண்டும்.
—————————————

ரிஷபம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். குழந்தைகளின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

⭐கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐ரோகிணி : பொறுமையுடன் செயல்படவும்.

⭐மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
—————————————

மிதுனம்

எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

⭐மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.

⭐திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.

⭐புனர்பூசம் : முடிவு கிடைக்கும்.
—————————————

கடகம்

உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கலை பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான செலவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

⭐பூசம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.

⭐ஆயில்யம் : மந்தமான நாள்.
—————————————

சிம்மம்

வாகன பராமரிப்பு தொடர்பான விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பின் மூலம் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

⭐மகம் : விரயங்கள் உண்டாகும்.

⭐பூரம் : பிரச்சனைகள் குறையும்.

⭐உத்திரம் : அனுகூலமான நாள்.
—————————————

கன்னி

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். ஓய்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐உத்திரம் : புரிதல் ஏற்படும்.

⭐அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும்.

⭐சித்திரை : முயற்சிகள் சாதகமாகும்.
—————————————

துலாம்

உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

⭐சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.

⭐சுவாதி : முன்னேற்றமான நாள்.

⭐விசாகம் : மாற்றம் உண்டாகும்.
—————————————

விருச்சிகம்

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பரிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

⭐விசாகம் : மந்தத்தன்மை குறையும்.

⭐அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

⭐கேட்டை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
—————————————

தனுசு

கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் புதுவிதமான சூழல் அமையும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

⭐மூலம் : பிரச்சனைகள் குறையும்.

⭐பூராடம் : புதுவிதமான நாள்.

⭐உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————

மகரம்

மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வேலை மாற்றம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். முக்கிய முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விரயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.

⭐திருவோணம் : முயற்சிகள் மேம்படும்.

⭐அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————

கும்பம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சிந்தித்து செயல்படவும். ஆர்வம் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

⭐அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.

⭐சதயம் : ஆரோக்கியம் மேம்படும்.

⭐பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
—————————————

மீனம்

மனதில் புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

⭐பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.

⭐உத்திரட்டாதி : சாதகமான நாள்.

⭐ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.
—————————————

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: