Saturday, December 2, 2023
Homeஆன்மிகம்இன்றைய ராசி பலன்கள் (30-10-2022)

இன்றைய ராசி பலன்கள் (30-10-2022)

இன்றைய நாள் 

நாள் : சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 30.10.2022

திதி : இன்று காலை 08.24 மணி வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

நட்சத்திரம் : இன்று காலை 10.25 மணி வரை மூலம். பின்னர் பூராடம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 01.52 மணி வரை சோபனம். பின்பு இரவு 10.49 வரை சுகர்மம். பின்னர் திருதி.

கரணம் : இன்று காலை 08.24 மணி வரை பாலவம் . பின்னர் மாலை 06.32 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 மணி வரை சித்த யோகம். பின்னர் 10.25 அமிர்த யோகம். பின்பு சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 01.45 முதல் 02.45 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.

எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

சூலம்: மேற்கு.

பரிகாரம்: வெல்லம்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

⭐அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

⭐பரணி : லாபம் உண்டாகும்.

⭐கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

⭐கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

⭐ரோகிணி : பொறுமையுடன் செயல்படவும்.

⭐மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

மிதுனம்
நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்கள் கைகூடும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

⭐மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

⭐திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.

கடகம்உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழப்பம் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

⭐புனர்பூசம் : திருப்திகரமான நாள்.

⭐பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

⭐ஆயில்யம் :விருப்பம்நிறைவேறும்.

சிம்மம்வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6.

💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐மகம் :நுணுக்கங்களைஅறிவீர்கள்.

⭐பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐உத்திரம் : தெளிவு பிறக்கும்.

கன்னிஉடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 1.

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

⭐உத்திரம் : இன்னல்கள் குறையும்.

⭐அஸ்தம் : அனுகூலமான நாள்.

⭐சித்திரை : நம்பிக்கை உண்டாகும்.

துலாம்கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 6.

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐சித்திரை : மாற்றமான நாள்

⭐சுவாதி : புரிதல் ஏற்படும்

⭐விசாகம் : வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

⭐விசாகம் : நெருக்கம்                                 அதிகரிக்கும்.

⭐அனுஷம் : சிந்தித்து  செயல்படவும்.

⭐கேட்டை : முதலீடுகள் அதிகரிக்கும்.

தனுசுநெருக்கமானவர்களுக்கு தேவையான உதவியை செய்து மகிழ்வீர்கள். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். புரிதல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐மூலம்: காரியசித்தி உண்டாகும்.

⭐பூராடம் : முன்னேற்றமான நாள்.

⭐உத்திராடம் : தெளிவு பிறக்கும்.

மகரம்புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். இழுபறியாக இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உலகியல் நடவடிக்கையின் மூலம் மனதில் மாற்றமும், பழக்கவழக்கங்களில் புதுமையும் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7.

💠அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

⭐உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

⭐திருவோணம் : பிரச்சனைகள் குறையும்

⭐அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.

கும்பம்உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

⭐அவிட்டம் : புரிதல் ஏற்படும்

⭐சதயம் : இன்னல்கள் குறையும்.

⭐பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.

மீனம்எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை சில தடைகளுக்கு பின் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 4.

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம

⭐பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.

⭐ரேவதி : லாபம் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments