Saturday, February 24, 2024
Homeஆன்மிகம்இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய நாள் 

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆனி 6

நாள் – மேல் நோக்கு நாள்

பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ திருதியை – Jun 20 01:07 PM – Jun 21 03:10 PM

சுக்ல பக்ஷ சதுர்த்தி – Jun 21 03:10 PM – Jun 22 05:28 PM

நட்சத்திரம்

பூசம் – Jun 20 10:36 PM – Jun 22 01:21 AM

ஆயில்யம் – Jun 22 01:21 AM – Jun 23 04:18 AM

கரணம்

கரசை – Jun 21 02:06 AM – Jun 21 03:10 PM

வனசை – Jun 21 03:10 PM – Jun 22 04:17 AM

பத்திரை – Jun 22 04:17 AM – Jun 22 05:28 PM

யோகம்

வியாகாதம் – Jun 21 01:47 AM – Jun 22 02:34 AM

ஹர்ஷணம் – Jun 22 02:34 AM – Jun 23 03:31 AM

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:07 AM

சூரியஸ்தமம் – 6:35 PM

சந்திரௌதயம் – Jun 21 8:33 AM

சந்திராஸ்தமனம் – Jun 21 9:26 PM

அசுபமான காலம்

இராகு – 12:21 PM – 1:55 PM

எமகண்டம் – 7:40 AM – 9:14 AM

குளிகை – 10:48 AM – 12:21 PM

துரமுஹுர்த்தம் – 11:56 AM – 12:46 PM

தியாஜ்யம் – 03:43 PM – 05:31 PM

சுபமான காலம்

அமிர்த காலம் – 06:13 PM – 08:00 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:31 AM – 05:19 AM

ஆனந்ததி யோகம்

மாதங்கம் Upto – 01:21 AM

ராக்ஷசம்

புதன் ஹோரை

காலை

06:00 – 07:00 – புத – சுபம்

07:00 – 08:00 – சந் – சுபம்

08:00 – 09:00 – சனி – அசுபம்

09:00 – 10:00 – குரு – சுபம்

10:00 – 11:00 – செவ் – அசுபம்

11:00 – 12:00 – சூரி – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சுக் – சுபம்

01:00 – 02:00 – புத – சுபம்

02:00 – 03:00 – சந் – சுபம்

மாலை

03:00 – 04:00 – சனி – அசுபம்

04:00 – 05:00 – குரு – சுபம்

05:00 – 06:00 – செவ் – அசுபம்

06:00 – 07:00 – சூரி – அசுபம்

வாரசூலை

சூலம் -வடக்கு

பரிகாரம் – பால்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் பிறக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் விலகும். குழந்தைகளின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் சற்று குறையும். செயல்பாடுகளில் செய்யும் சில மாற்றங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரணி : குழப்பம் விலகும்.

கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.

ரிஷபம் எதிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : முயற்சிகள் அதிகரிக்கும்.

ரோகிணி : இன்னல்கள் குறையும்.

மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.

மிதுனம் பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.

திருவாதிரை : மாற்றமான நாள்.

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

கடகம் வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் அனுபவம் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

பூசம் : மாற்றமான நாள்.

ஆயில்யம் : எண்ணங்கள் நிறைவேறும்.

சிம்மம் உத்தியோக பணிகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : திருப்பங்கள் ஏற்படும்.

பூரம் : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் அமைதி உண்டாகும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.

சித்திரை : மேன்மை உண்டாகும்.

துலாம் உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். கலை சார்ந்த பணிகளை பற்றிய அனுபவம் ஏற்படும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். குழப்பம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

சுவாதி : இழுபறிகள் மறையும்.

விசாகம் : அனுபவம் ஏற்படும்.

விருச்சிகம் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். திருப்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.

அனுஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கேட்டை : உதவிகள் சாதகமாகும்.

தனுசு கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மற்றவர்களிடத்தில் கோபப்படுவதை தவிர்க்கவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

பூராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.

மகரம் குடும்ப உறுப்பினர்களின் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தனவரவுகளில் இருந்த தாமதங்கள் குறையும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொன், பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : விரயங்கள் ஏற்படும்.

திருவோணம் : தாமதங்கள் குறையும்.

அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.

கும்பம் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். ஆன்மிக பயணங்கள் கைகூடும். அரசு சார்ந்த துறைகளில் நெருக்கடிகள் குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அவிட்டம் : கவலைகள் குறையும்.

சதயம் : வரவுகள் உண்டாகும்.

பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.

மீனம் தனவரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

ரேவதி : உதவிகள் கிடைக்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments