Monday, October 2, 2023
Homeஆன்மிகம்இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய நாள் 

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆனி 7

நாள் – கீழ் நோக்கு நாள்

பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சதுர்த்தி – Jun 21 03:10 PM – Jun 22 05:28 PM

சுக்ல பக்ஷ பஞ்சமி – Jun 22 05:28 PM – Jun 23 07:54 PM

நட்சத்திரம்

ஆயில்யம் – Jun 22 01:21 AM – Jun 23 04:18 AM

மகம் – Jun 23 04:18 AM – Jun 24 07:18 AM

கரணம்

பத்திரை – Jun 22 04:17 AM – Jun 22 05:28 PM

பவம் – Jun 22 05:28 PM – Jun 23 06:41 AM

யோகம்

ஹர்ஷணம் – Jun 22 02:34 AM – Jun 23 03:31 AM

வஜ்ரம் – Jun 23 03:31 AM – Jun 24 04:31 AM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:07 AM

சூரியஸ்தமம் – 6:35 PM

சந்திரௌதயம் – Jun 22 9:22 AM

சந்திராஸ்தமனம் – Jun 22 10:09 PM

அசுபமான காலம்

இராகு – 1:55 PM – 3:28 PM

எமகண்டம் – 6:07 AM – 7:41 AM

குளிகை – 9:14 AM – 10:48 AM

துரமுஹுர்த்தம் – 10:17 AM – 11:06 AM, 03:16 PM – 04:06 PM

தியாஜ்யம் – 05:48 PM – 07:36 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:56 AM – 12:46 PM

அமிர்த காலம் – 02:30 AM – 04:18 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:31 AM – 05:19 AM

ஆனந்ததி யோகம்

அமுதம் Upto – 04:18 AM

முசலம்

வியாழன் ஹோரை

காலை

06:00 – 07:00 – குரு – சுபம்

07:00 – 08:00 – செவ் – அசுபம்

08:00 – 09:00 – சூரி – அசுபம்

09:00 – 10:00 – சுக் – சுபம்

10:00 – 11:00 – புத – சுபம்

11:00 – 12:00 – சுக – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சனி – அசுபம்

01:00 – 02:00 – குரு – சுபம்

02:00 – 03:00 – செவ் – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சூரி – அசுபம்

04:00 – 05:00 – சுக் – சுபம்

05:00 – 06:00 – புத – சுபம்

06:00 – 07:00 – சந் – சுபம்

வாரசூலை

சூலம் – தெற்கு

பரிகாரம் – தைலம

இன்றைய ராசி பலன்கள்.

மேஷம் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : மாற்றம் ஏற்படும்.

கிருத்திகை : சாதகமான நாள்.

ரிஷபம்பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். அலைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.

ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தடைப்பட்ட வரவு கிடைக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சுத் திறமையால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

திருவாதிரை : விருப்பம் நிறைவேறும்.

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

கடகம்புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். சகோதரர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வாக்குவன்மையின் மூலம் நன்மை உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.

பூசம் : உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம் : நன்மை உண்டாகும்.

சிம்மம் செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உபரி வருமானம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : வரவுகள் கிடைக்கும்.

பூரம் : தேவைகள் நிறைவேறும்.

உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

கன்னிபொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.

அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்செய்கின்ற முயற்சிகளால் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.

சுவாதி : மேன்மை ஏற்படும்.

விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம் மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

அனுஷம் : இழுபறிகள் குறையும்.

கேட்டை : தடைகள் அகலும்.

தனுசு சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : மாற்றம் ஏற்படும்.

பூராடம் : புரிதல் உண்டாகும்.

உத்திராடம் : சோர்வு நீங்கும்.

மகரம் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திராடம் : ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் : போட்டிகள் குறையும்.

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

கும்பம் விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழிலில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் லாபம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.

சதயம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

பூரட்டாதி : லாபகரமான நாள்.

மீனம் நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

பூரட்டாதி : சுபமான நாள்.

உத்திரட்டாதி : தெளிவு ஏற்படும்.

ரேவதி : சுறுசுறுப்பான நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments