ராசிபலன் – 09/10/2022
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 09.10.2022
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ பௌர்ணமி – Oct 09 03:42 AM – Oct 10 02:24 AM
கிருஷ்ண பக்ஷ பிரதமை – Oct 10 02:24 AM – Oct 11 01:39 AM
நட்சத்திரம்
உத்திரட்டாதி – Oct 08 05:08 PM – Oct 09 04:20 PM
ரேவதி – Oct 09 04:20 PM – Oct 10 04:02 PM
கரணம்
பத்திரை – Oct 09 03:42 AM – Oct 09 03:00 PM
பவம் – Oct 09 03:00 PM – Oct 10 02:24 AM
பாலவம் – Oct 10 02:24 AM – Oct 10 01:57 PM
யோகம்
துருவம் – Oct 08 08:54 PM – Oct 09 06:36 PM
வியாகாதம் – Oct 09 06:36 PM – Oct 10 04:42 PM
வாரம்
ஞாயிற்றுக்கிழமை
நல்ல நேரம்
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.
நேத்திரம்: 2 – ஜீவன்: 1
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
மனதில் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தந்தை வழி சொத்துக்களின் மீதான பிரச்சனைகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.
⭐️அஸ்வினி : புதுமையான நாள்.
⭐️பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.
*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். இறைவழிபாட்டில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள் மறையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
⭐️ரோகிணி : மதிப்பு மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : தெளிவு ஏற்படும்.
*_🔯 மிதுனம் -ராசி: 👫_*
வியாபார பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். உணவு தொடர்பான துறைகளில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.
⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐️திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
*_🔯 கடகம் -ராசி: 🦀_*
கௌரவ பொறுப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முன்யோசனையின்றி செயல்படுவதை தவிர்க்கவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். ஆதரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
⭐️பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️ஆயில்யம் : கவனம் வேண்டும்.
*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். கடன் சார்ந்த சில பிரச்சனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️பூரம் : கவனம் வேண்டும்.
⭐️உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
*_🔯 கன்னி -ராசி: 🧛♀️_*
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கூட்டுத்தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். இழந்த பொருட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சமூகம் தொடர்பான துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
⭐️அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
*_🔯 துலாம் -ராசி: ⚖_*
உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆதாயம் மேம்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️சித்திரை : உதவி கிடைக்கும்.
⭐️சுவாதி : ஆதாயம் மேம்படும்.
⭐️விசாகம் : தெளிவு பிறக்கும்.
*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். கைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
⭐️விசாகம் : புரிதல் உண்டாகும்.
⭐️அனுஷம் : இன்னல்கள் குறையும்.
⭐️கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
*_🔯தனுஷ்-ராசி: 🏹_*
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பொன் ஆபரண சேர்க்கை சிலருக்கு உண்டாகும். புதுவிதமான கலைகளில் ஆர்வம் ஏற்படும். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️மூலம் : ஒத்துழைப்பு மேம்படும்.
⭐️பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
⭐️உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.
*_🔯 மகரம் -ராசி: 🐴_*
எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சொத்து பிரிவினைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
⭐️திருவோணம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
⭐️அவிட்டம் : சாதகமான நாள்.
*_🔯 கும்பம் -ராசி. ⚱_*
சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாக்கு திறமைகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு இருந்துவந்த குழப்பம் நீங்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பற்கள் தொடர்பான இன்னல்கள் குறையும். வரவு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.
⭐️அவிட்டம் : முடிவு கிடைக்கும்.
⭐️சதயம் : அனுகூலமான நாள்.
⭐️பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
*_🔯 மீனம் -ராசி: 🐠_*
எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடல்நிலையில் புது பொலிவு உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பிற்கு நன்மை அளிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நிறைவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : அனுகூலமான நாள்.
⭐️உத்திரட்டாதி : பொலிவு உண்டாகும்.
⭐️ரேவதி : வாய்ப்புகள் கைகூடும்.