இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பாம்பு விழுந்தான் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் மையம் செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1000/- வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை துவக்கி வைத்து மாநில முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இத்திட்டத்தில் விண்ணப்பபடிவம் பதிவு செய்யும் பணி நடைபெற்றுகிறது.அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்ட முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடை பெறுகின்றன.
இதில் 326 நியாய விலைக்கடைகளுக்கு உட்பட்ட பகுதி மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடை பெறுகிறது. இதில் 439 நியாய விலைக்கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஆய்வின் போது உடனிருந்தவர்கள்
- இந்த ஆய்வின் போது இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப்ரசூல், வட்டாட்சியர் ரவி,வட்ட வழங்கல் அலுவலர் சம்பத், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சந்திரன்,தி முக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.