Sunday, May 28, 2023
HomeUncategorizedஇராமநாதபுரத்தில் கோவிட் - 19 சிகிச்சைக்கான ஒத்திகை நிகழ்ச்சி!மாவட்ட ஆட்சியிர் பார்வையிட்டார்

இராமநாதபுரத்தில் கோவிட் – 19 சிகிச்சைக்கான ஒத்திகை நிகழ்ச்சி!மாவட்ட ஆட்சியிர் பார்வையிட்டார்

இராமநாதபுரத்தில் கோவிட் – 19 சிகிச்சைக்கான ஒத்திகை நிகழ்ச்சி!மாவட்ட ஆட்சியிர் பார்வையிட்டார்

இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் – 19 சிகிச்சைக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாம் வர்கீஸ், பார்வையிட்டார்.

கோவிட்-19 தடுப்பு முறை பகிர்வு

இந்திய நாடு முழுவதும் இன்று கோவிட்-19 க்கான சிகிச்சை வழங்குவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது வருகின்றன.  அதனடிப்படையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 க்கான மேற்கொள்ளும் சிகிச்சை குறித்த ஒத்திகை நடைபெறுகிறது.

குறிப்பாக கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்த நபரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதல் கட்ட பரிசோதனை எவ்வாறு மேற்கொள்வது என்றும் தொடர்ந்து அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை வழங்க வேண்டும் என்பது குறித்தும் மருத்துவர்கள் செயல்விளக்கம் பொதுமக்களிடையே அறிந்து கொள்ளும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சியினை காண்பித்தார்கள்.

இதே போல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனை ஆய்வு

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் கோவிட்-19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளன.

மேலும் போதியளவு மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புக்கான சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 KL மற்றும் 10 KL கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன.

மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. கோவிட்-19 நோய் தொற்று வரும் நிலை இருந்தாலும் அதை முழுமையாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்களை பொறுத்தவரை கோவிட்-19 நோய் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் மருத்துவத்துறை வழங்கும் ஆலோசனைகளை கடைபிடித்து முககவசம் பயன்படுத்தி பாதுகாப்புடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments