Thursday, March 28, 2024
Homeமருத்துவம்பொடுகு தொல்லைக்கு தீர்வு

பொடுகு தொல்லைக்கு தீர்வு

பொடுகு தொல்லைக்கு தீர்வு

கண்ணுக்கு மைய அழகு,  காலுக்கு கொலுசு அழகு, பெண்ணுக்கு கூந்தல் அழகு என்று பலர் சொல்வதை கேட்டிரூப்போம்.  ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பதே பெரிய சுமையாக இருக்கிறது.

  • வெந்தயம்

வெந்தயத்தை தேங்காய் எண்ணெய்யில் ஊற  வைத்து, தலை முடியில் தேய்த்தால்  ஒரே வாரத்தில் பொடுகுக்கு குட்பை சொல்லாம்.   அதே போல்,  ஊற வைத்த வெந்தயத்துடன், தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கும்.

  • இலுப்பை புண்ணாக்கு

இலுப்பை புண்ணாக்கை வாங்கி வந்து,  இடித்து நன்கு பொடியாக்கி நீரில் கலக்க வேண்டும். இந்த பசையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும்.

  • கற்றாழை

கற்றாழை சாற்றை தலையில் வடு பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும். பின்பு,  கைகள்  தலை முடியை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு, வெது வெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும் வாரம் ஒரு முறை இப்படி செய்தால், பொடுகு தொல்லை மற்றும் அதனால் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

  • பாசிப்பருப்பு

உடல் உஷ்ணத்தாலும் பலருக்கு பொடு தொல்லை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் பாசிப்பருப்பை அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலைமுடியில் தடவி 1 மணி ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச  வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments