- இந்த பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று அதிகாலை ,உச்சிவேளை, மாலை பொழுதில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
- இதற்கு மகத்துவமான சக்தி உண்டு.கோவில்களில் மூன்று வேளையும் தீபம் ஏற்றி வழிபட்டால் தீபங்கள் உடனுக்குடன் நிவாரணம் தரும்.
- மிக கடுமையான பிரச்சனைகள் தீர சுத்தமான நெய்யினைகொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.
- இறைவனின் கருவறையில் சுடர்விடும் தூங்கா விளக்கில் இந்த நெய்யினை சேர்த்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும்.
- இது உடலில் இருந்து உயிர் பிரிய போகும் நேரத்தை கூட தள்ளிப்போடும் சக்தி படைத்தது.
- வாரத்திற்கு ஒருமுறை கல் உப்பினை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.
- அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
- கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து, தேங்காயில் விளக்கேற்றி வந்தால் பிரச்சனைகள் தீருவதுடன், முன்னேற்றத்தை தடை செய்யும் தேக்க நிலை மாறும்.