இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அரசு செயலர் நந்தகுமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொண்ட பணிகள்
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷின் சமத்துவபுரங்களின் பராமரிப்பு, பிரதம மந்திரி சுவாஸ் யோஜனா, நீலப்புரட்சி திட்டம், பசுமை வீடுகள் திட்டம், வேளாண்மைத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுசுகாதாரத்துறை, நெடுங்சாலைத்துறை மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகிய துறைகளில் மற்றும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் முடிவுற்ற பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதுடன் பணிகளை திட்டமிட்டபடி உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும்.
விவசாயம் மட்டும் வேளாண்மை பணிகள்
அதனைத் தொடர்ந்து, தேவேந்திரநல்லூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும்.
பின்னர் கமுதக்குடியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய குழுக்களுக்கு தரிசு நிலங்களை சீரமைத்து வேளாண்மைத்துறையின் மூலம் வேளாண் இடுபொருள்கள் வழங்கி விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு, இத்திட்டம் 5 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும். இதன் நோக்கம் அனைத்து ஊராட்சிகளிலும் விவசாய பணிகள் மேற்கொள்ளாத தரிசு நிலங்களை சீரமைத்து விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுக்களாக பண்னைய திட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுகின்றன. எனவே விவசாயிகள் தங்களுக்குரிய விலை நிலங்களில் பயன்பாடஅற்ற நிலங்கள் இருந்தால் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெற்றிட வேண்டுமென மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அரசு செயலர் நந்தகுமார், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு , மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்