Tuesday, June 6, 2023
Homeராமநாதபுரம்வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்

வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்

முன்னேற விளையும் மாவட்ட திட்டம்  தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சிறப்பு செயலாளர் ஹர் சகாய் மீனா, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் அரசு சிறப்பு செயலாளர் .ஹர் சகாய் மீனா, அவர்கள் தலைமையில் இன்று (15-10-2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் அரசு சிறப்பு செயலாளர்.ஹர் சகாய் மீனா., அவர்கள் தெரிவிக்கையில்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கர்ப்பிணி பெண்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உணவு வகைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளை கவரும் வகையில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். மேலும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சோப் பயன்படுத்தி கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேர்டும். மேல்நிலை நேர்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மை செய்ய வேண்டும். மாவட்ட அலுவலர்கள் களப்பணிகளின் போது முதன்முதலில் பள்ளிக் கழிப்பறைகளை ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து பள்ளிக் களிப்பறைகளில் சுத்தம் செய்யப்பட்ட நாள், நேரம், சுத்தம் செய்த பணியாளர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய தகவல் பலகை கண்டிப்பாக நிறுவ வேண்டும். மாவட்டத்தில் 100 சதவிகிதம் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். இடைநிற்றலை தடுப்பதற்கு பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வோர்டும். மேலும் கிராமங்களில் “ஐ ஆம் கலாம்” போன்ற சிறந்த திரைப்படங்களை திரையிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் கல்வியோடு விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிவுறுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்க்க வேண்டும். மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேற விளையும் திட்டங்களை நிறைவு செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் நமது மாவட்டம் திட்டங்களை செயல் படுத்துவதில் முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டும் என திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் அரசு சிறப்பு செயலாளர் .ஹர் சகாய் மீனா, அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .கே.ஜே.பிரவீன் குமார்., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் .ஆ.ம.காமாட்சி கணேசன் அவர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments