பரமக்குடி அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பரமக்குடி, ஏப்.05- பரமக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்கள் விபத்து தொடர்பான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை பரமக்குடி டி.எஸ்.பி திருமலை பச்சைக் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி விபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பி பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பார்த்திபனூர் இன்ஸ்பெக்டர் சுதா, போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் வீடுகளுக்குள் படையெடுக்கும் விஷ பாம்புகள்