ராமநாதபுரத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில், கலந்து கொண்டர்.
அதிகரித்து வரும் சாலை விபத்து
கடந்த ஜனவரி 2022 முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலத்தில் 262 உயிரிழப்பு வாகன விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 281 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறித்தும் இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் மேற்படி கூட்டத்தில், தற்போது தலைக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் அபதாரம் விதிக்கப்படுவதுடன், ஓட்டுனர் உரிமம் இரத்து செய்வது குறித்தும், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், பெட்ரோல் பங்கில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்காமல் இருப்பது குறித்தும் தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சாலையின் வாகனத்தில் பயணிப்பவர் கவனத்திற்கு
இருசக்கர வாகன விபத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்களே அதிக அளவில் இறப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருசக்கர வாகன விபத்துகளின் மூலம் ஏற்பட்ட 126 மனித உயிரிழப்புகளில் 99 % மனித உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்டுள்ளதால்,
மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தினை இயக்குபவரும், உடன் பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணிக்க கூடாது என்றும், நகர எல்லைக்குள் இருசக்கர வாகனத்தினை இயக்கும் போது 40 கிமீ வேகத்திற்கு மிகாமல்
மிதவேகத்தில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கவும் எனவும் சாலைப்பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு சாலை ஞானம் வளர்போம் சாலை விபத்தினை தவிர்ப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.