ராமநாதபுரத்தில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மணல் தேங்கியுள்ளதாகவும் இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் தெரியவந்ததையொட்டி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டதுடன்
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலை வரை மண்களை அகற்றி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் சீரமைத்து வண்ணம் பூசும் பணியும் நடைபெறுகிறது. இதே போல் நகராட்சியில் மற்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் மண்கள் அகற்றி சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.