Sunday, November 3, 2024
Homeசெய்திகள்11, 12 வகுப்புகளில் ரோபோட்டிக்ஸ்,ஏ.ஐ., பாடம்: வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

11, 12 வகுப்புகளில் ரோபோட்டிக்ஸ்,ஏ.ஐ., பாடம்: வரும் கல்வியாண்டில் அறிமுகம்!

புதுடில்லி; ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பாடமுறையில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ்,செயற்கை நுண்ணறிவு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) 2025-26 முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி செய்யப்படுகிறது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு படிப்புகளை கொண்டு வருவது இதன் முக்கிய கட்டமாகும். முதற்கட்டமாக இந்தப் புதிய படிப்புகள் ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்பட உள்ளன. கணினி அறிவியலுடன் செயற்கை நுண்ணறிவு பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தவிர, முக்கிய அம்சமாக, மதிப்பெண் அட்டை வடிவில் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதா என கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளின் போது மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், வெற்றி பெறவும் இது போன்ற பாடத்திட்ட மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

தேசியக்கல்வி கொள்கையை பின்பற்றி கொண்டு வரப்படும் இந்த மாற்றங்கள் மூலம் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments