நடிகர் விஜய் ஆண்டனி இப்போது தயாரிப்பிலும் ஈட்டுபடுகிறார். இதற்காக ‘குட் டெவில்’ புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
‘குட் டெவில்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘ரோமியோ என்ற பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மற்றும் விடி. வி.கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி ,ஆகியோரும் நடிக்கிறார்கள் .
இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்குகிறார். இவர் ‘கணம்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆகும். இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘லவ் குரு’ என்று பெயரிடப்பட்டுள்ளது..இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது மற்றும் தயாரிப்பைத் தவிர, விஜய் ஆண்டனி படத்தொகுப்பையும் கவனித்து வருகிறார்.