Thursday, September 21, 2023
Homeராமநாதபுரம்ராமேஸ்வரத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடல் சீற்றம்

ராமேஸ்வரத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடல் சீற்றம்

ராமேஸ்வரத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடல் சீற்றம்

ராமநாதபுரத்தில் ராமேஸ்வரத்தின் அருகே பாம்பன், மண்டபத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது

ராமநாதபுரம் பனைக்குளம், இலங்கைைய ஒட்டி தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று  நாகப்பட்டினத்திற்கும்-புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புயல் சின்னம் அறிக்கை 

இந்த நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் சின்னத்தை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் உள்ள மண்டபம் வடக்கு பகுதியில் கடல் பகுதியில் ஆகும். வழக்கத்திற்கு மாறாக நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டதுடன் வடக்கு கடற்கரை பகுதியில் தடுப்பு சுவரில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு மேல்நோக்கி கடல் சீற்றமாக காணப்பட்டதால் மக்கள் அச்சம்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை

மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். இதேபோல் பாம்பன் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டது. புயல் சின்னத்தை தொடர்ந்து 3-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் ஏராளமான நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்லாமல் கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments