Saturday, December 9, 2023
Homeசினிமாஇராமாயணம் படத்திற்கு சீதையாக சாய் பல்லவி

இராமாயணம் படத்திற்கு சீதையாக சாய் பல்லவி

இராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர்.

ஆதிபுருஷ் என்ற பெயரில் தயாரான ராமாயண படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவண னாக சயீப் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர்.தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராக உள்ளது. பாகுபலி கிராபிக்ஸ் காட்சி களை மிஞ்சும் வகையில் அதிக பொருட்செலவில் 3 பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர்.நிதிஷ் திவாரி டைரக்டு செய்கிறார். அல்லு அரவிந்த், மதுமந்தெனா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக அலியாபட்டும் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினைகளால் படத்தில் இருந்து அலியாபட் விலகி விட்டார். இதையடுத்து அலியா பட்டுக்கு பதிலாக சீதை வேடத்தில் நடிக்க சாய்பல்லவியை படக்குழுவினர் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய்பல்லவியும் ராமாயண படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments