Saturday, December 9, 2023
Homeசினிமாசரத்குமார்-அமிதாஷ் நடிக்கும் ”பரம்பொருள்

சரத்குமார்-அமிதாஷ் நடிக்கும் ”பரம்பொருள்

கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான பரம்பொருள் திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி.அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.

சிலைக்கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி.சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ரிச்சி படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, டான், சாணிக் காயிதம்,ராக்கி, எட்டு தோட்டாக்கள் படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

பரம்பொருள் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதை இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர். விழாவில், நடிகர் சரத்குமார், நடிகர் அமிதாஷ், இயக்குநர் சி. அரவிந்த் ராஜ்,இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா,தயாரிப்பாளர்கள் மனோஜ் மற்றும் கிரிஷ், நடிகர் பாலகிருஷ்ணன்,கலை இயக்குநர் குமார் கங்கப்பன், ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார்,ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி, சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன்,நடிகர் வின்சன்ட் அசோகன் இயக்குனர் பாலாஜி, நடன இயக்குநர் சதீஷ் ஆகியோரும் பேசினார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments