Thursday, April 18, 2024
Homeசெய்திகள்மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 581 மிதிவண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி நல்ல மாணவர்களை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை பெற முடியும் என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதி, நீராவி, இராமசாமிபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  ராஜகண்ணப்பன் தலைமையேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.

நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு கல்வி மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மனிதனுக்கு கல்வி ஒன்றே நிலையான சொத்தாகும். ஒருவர் முழுமையான கல்வி பெறுவதன் மூலம் அவர்களுடைய பொருளாதாரம் தானாக வளர்ச்சி பெரும், அந்த அளவிற்கு கல்வி மிக முக்கியமான ஒன்றாகும். இக்கல்வியை வசதி படைத்தவர்களுக்கு இணையாக வறுமையில் உள்ளவர்களும் முழுமையாக கல்வியைப் பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மற்ற துறைகளை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு வழங்கி அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு இன்று பள்ளிக்கல்வித்துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது .

மாணவர்களுக்கு அறிவுரை

இன்று நகர் பகுதி முதல் கிராம பகுதிகள் வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் நன்றாக படித்து உயர்கல்வி வரை செல்வது நமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. அதற்கேற்ப மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் வழிகாட்டுதலை பின்பற்றி நன்றாக படித்து வெற்றி பெற வேண்டும். முன்பெல்லாம் பெண்கள் உயர்கல்வி வரை செல்வது எண்ணிக்கையில் குறைவாக இருந்தது. அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி உள்ளார்கள். பொதுவாக ஒரு பழமொழி ஒன்று உண்டு. ஆண்கள் படித்தால் அதன் பயன் அவருக்கு மட்டுமே சேரும். ஆனால் பெண்கள் படித்தால் அந்த குடும்பமே பயன்பெறும் என்பது பழமொழி, அதை உறுதிப்படுத்தும் வண்ணம் பெண்கள் உயர் கல்வி வரை படிக்க அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. தற்பொழுது கூட 7.5 % விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், , பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர். அப்தாப் ரசூல்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கமுதி பேரூராட்சி தலைவர்அப்துல் வகாப் சகாராணி  தலைமையாசிரியர்கள் மாரிமுத்து,  சேர்மம் சண்முகவேல் ,  முத்துகிருஷ்ணன் , கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments