Friday, September 22, 2023
Homeராமநாதபுரம்மத்திய பல்கலைகழகத்தில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை

மத்திய பல்கலைகழகத்தில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை

மத்திய பல்கலைகழகத்தில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ / மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.200 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடுஅரசு ஆணையிட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டில் புதியது (Fresh Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் முறை

மேலும் மேற்படி 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2வது தளம்,சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண்.044-29515942.

மின்னஞ்சல் முகவரி [email protected] முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023 க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments