Friday, March 29, 2024
Homeராமநாதபுரம்அறிவியல் மனப்பான்மையே மாணவப் பருவத்திலேயே வளர்த்து கொள்ள வேண்டும்! மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்.

அறிவியல் மனப்பான்மையே மாணவப் பருவத்திலேயே வளர்த்து கொள்ள வேண்டும்! மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்.

அறிவியல் மனப்பான்மையே மாணவப் பருவத்திலேயே வளர்த்து கொள்ள வேண்டும்! மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்.

இராமநாதபுரம் மாவட்டம், வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களிள் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், துவக்கி வைத்து தெரிவிக்கையில்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தம் வகையில் வானவில் மன்றம் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.

அதனடிப்படையில் இன்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திட்டம் துவங்கியுள்ளது. STEM என்பது Science, Technology, Engineering, Mathematics என்பதன் கூட்டு தொகுப்பாகும். அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை கொண்டதாள ஒரு கற்றல் செயல் திட்டமாகும். அறிவியல் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும், தொழில்நுட்பமும், பொறியியலும் மனித வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளின் அம்சமாகவும் உள்ளது. அது போலவே கணிதமும். இந்த STEM திட்டத்தை அடிப்படையாக கொண்டு வானவில் மன்றங்களை தமிழ்நாட்டின் பள்ளிகளில் துவங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்க அம்சமாகும்.அறிவியல் மனப்பான்மையை மாணவ பருவத்திலேயே வளர்த்தெடுப்பது. ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டு விடை தேடும் சமூகத்தை உருவாக்க இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. எனவே மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் இப்பருவத்திலேயே ஏன் எதற்கு எப்படி என்று கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும்.நம்முடைய ஒவ்வொரு செயலிலும் அறிவியல் நிறைந்துள்ளது. அதேபோன்று நாம் வாழும் இச்சமுதாயதில் சமூக அக்கறையோடு கேள்வி கேட்க வேண்டும். இச்சமூகத்தில் நடக்கும் அனைத்திற்கும் ஒரு முறை இருக்கிறது. நாம் பின்பற்றும் அனைத்து முறைகளுக்கும் தத்துவம் உண்டு.

மாணவர்கள் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

இத்திட்டத்திற்காக இராமநாதபுரம் முழுவதும் 16 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளை உடன் எடுத்து வருவார்கள், பள்ளிதோறும் வரும் கருத்தாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு துணையோடு அறிவியல் பரிசோதனைகளை செய்து காண்பிப்பார்கள். அவ்வாறு வரும் கருத்தாளர்களிடம் மாணவர்கள் பலவேறு கோணத்தில் அறிவியல் ரீதியாகவும், சமூக சிந்தனையுடன் கேள்வி கேட்டு நன்றாக புரிந்து படிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாநில கருத்தாளர் ஆசிரியர் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, வட்டார கல்வி அலுவலர் இராமநாதன்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments