தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வளி மண்டல கீழடுக்கு சுழற்ச மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
29.04.2022. 30.04.2022: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகுரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை
பெய்யக்கூடும்.
01.05.2022. 02.05.2022, 03.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேோரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதுவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தக்கலை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி) 3 தலா, பெரியார் (தேனி) 2, பேச்சுப்பாறை கன்னியாகுமரி) 1.