Thursday, March 28, 2024
Homeதொழில் பழகுவோம்"விதை பந்து" தொழில் செய்வோம்

“விதை பந்து” தொழில் செய்வோம்

“விதை பந்து” தொழில் செய்வோம்.

மரம் வைத்து பாதுகாத்து வளர்க்க முடியாத தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மரம், செடி, கொடிகளை பரிசாக அளித்து வந்தனர். அதேபோல் தற்போது விதைப்பந்துகளை பரிசாக வழங்கி வருகின்றனர்.

விதைப்பந்து – கோலி உருண்டை

களிமண், செம்மண், பசுஞ்சாணம் போன்ற கலவையின் உள் விதைகளை வைத்து பந்துபோல் அல்லது கோலி உருண்டை அளவு செய்வததே விதைப்பந்து ஆகும்.

வளரக்கூடிய தன்மை

விதைப்பந்தில் உள்ள சிறப்பு இயல்பே நாம் எந்த இடத்தில் அதை போடுகிறோமோ அந்த இடத்தின் பருவ நிலை மற்றும் தட்பவெப்பநிலை சூழ்நிலைகளைத் தாங்கி வளரக்கூடிய தன்மை அந்த விதைக்கு கிடைக்கும்.

விதை பந்து – தயாரிப்பு

தோட்டத்து மேல் மண் (செம்மண் / களிமண்), விலங்கு கழிவு (மக்கிய ஆடு அல்லது மாட்டு எரு / பசுஞ்சாணம் / மண்புழு உரம்), நாட்டு மர விதைகள்.

மண்: விலங்கு கழிவு: விதை = 5 : 3 : 1 என்ற அளவில் எடுத்து விதையை உள்ளே வைத்து மூட வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் சிறிதளவு நீரூற்றி பிசைந்து நடுவே, சேகரித்த விதைகளை வைத்து நிழலில் உலர்த்தி, பின் வெயிலில் ஒருநாள் காய வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் விதை பந்துகளில் வெடிப்பு  எதுவும் ஏற்படாமல் நன்கு காய்ந்து விடும்.

நாம் உருவாக்கிய இந்த விதை பந்து பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். குறிப்பாக பறவைகள், எறும்புகள், எலி போன்றவைகளிடமிருந்து ஒரு ஆண்டு வரை பாதுகாக்கும்.

விதை பந்தில் கலந்துள்ள சாணமானது, நுண்ணுயிர்களை உருவாக்கி,  செடியின் வேர், மண்ணில் எளிதில் சென்று  தன்னை  மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.

"விதை பந்து" தொழில் செய்வோம்

விதை மரங்கள்

வேம்பு, புங்கன், கருவேல், வெள்வேல், சந்தனம், சீத்தா, வேங்கை, மகிழம், வாகை, கொய்யா, புளி, ஆலமரம், அரசு, புன்னை, வில்வம், வள்ளி, கருங்காலி, நாகலிங்கம் இவ்வகை நாட்டு மரங்கள் விதை பந்து தயாரிக்க உகந்தவை.

சுப நிகழ்ச்சிகள் – திருமணம், காதுகுத்து

இன்று தனியார் நிறுவனங்களும் தனிநபர்களும் விதை பந்துகளை பரிசாக வழங்கி வருகின்றனர். அதேபோல் திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் பரிசாக இந்த விதைப்பந்து பை வழங்கப்பட்டு வருகிறது.

பேக்கிங் செலவு

எனவே விதை பந்துகளை அழகாக செய்து, மிக சிறப்பாக பேக்கிங் செய்து அந்த நிறுவனங்களின் பெயர்களை அந்த பேக்கிங்கில் அச்சிட்டு விற்பனை செய்ய இயலும். இதில் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச செலவு என்றால் பேக்கிங் மட்டுமே. மேலும் இந்த பேக்கிங் விலையும் மிகக் குறைந்த விலையில் நம்ம பெற இயலும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments