இலங்கையிலிருந்து இராமேசுவரம் பகுதிக்கு சட்டவிரோதமாக தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. இலங்கையிலிருந்து தங்கச்சிமடம் பகுதிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், இந்தப் பகுதியில் கடலோரக் காவல் படையினர், வருவாய் புலனாய்வுப் பிரிவினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, படகில் இருந்த தங்கச்சிமடம் மாந்தோப்புப்பகுதியை சேர்ந்த தேவசகாயம், டேனியல், ஸ்ரீதர், கெவின்ராஜ் ஆகிய நால்வரையும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.