பரமக்குடி பகுதியில் பயன்படுத்தப்பட்ட மறு முத்திரையிடப்படாத 66 தராசுகள், எடை கற்களை தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.
புகார்
பரமக்குடி உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் சாலையோரம் உள்ள, பழம் மற்றும் காய்கறி கடைகளில் 1 கிலோ பொருட்கள் வாங்கினால் 750 கிராம் மட்டுமே இருப்பதாகவும், சரியான தராசுகள் பயன்படுத்துவதில்லை என முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார்கள் வந்தன.
உதவி ஆணையர் ஆய்வு
இதனால் தொழிலாளர் உதவி ஆணையர் பாரி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் கதிரவன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் விமலா, மனோகர், வசந்தா, சேதுபதி, பஞ்சு ஆகியோர் உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் மறு முத்திரையிடப்படாமலும், சரியான அளவுகள் காட்டாமலும், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 66 மின்னணு தராசுகள், எடை கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எச்சரிக்கை
முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.