தமிழகத்தில் கஞ்சா கட்டுப்படுத்தப்படும் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று பால் விலை, மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், நகரத் தலைவர் உதயா, மாவட்டத்துணைத்தலைவர் சுகனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு ஹெச்.ராஜா கூறியதாவது:
ஆர்ப்பாட்டத்தின் போது ஹெச்.ராஜா அவர்கள் பல்வேறான கருத்துக்களை முன் வைத்தார் கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. இதற்கு மருத்துவர்களின் பொறுப்பற்ற செயல்தான் காரணம். தமிழகத்தில் கஞ்சா பயன்பாடுவதால் சட்டம், ஒழுங்கு கெட்டு மோசமான சூழல் நிலவுகிறது. விடியா ஆட்சி அகற்றப் பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தால் கஞ்சா கட்டுப்படுத்தப்படும். காரணமே இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்
அமைச்சர் செந்தில் பாலாஜி. போல் தி.மு.க.வில் பொறுப்புடன் நடந்துகொள்ள கூடிய அமைச்சர்கள் ஒருவர் கூட இல்லை. அரசின் வெள்ள நிவாரண நிதி என்பது யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல் உள்ளது. தி.மு.க. அரசு மழை உள்பட எந்த விஷயத்திலும் திட்டமிட்டு செயல்படவில்லை.
எஸ்.புதூர், அ.காளாப்பூர், இளையான்குடி,போன்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டம்
எஸ்.புதூரில் ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட துணை தலைவர்கள் நாகராஜன், கண்ணையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொது செயலாளர் முருகேசன் பலர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் சிங்கம்புணரி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கண்ணையா முன்னிலை வகித்தார்.
இதில், நாகராஜ், ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் காளாப்பூர் தயாளன், ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாடு மாவட்ட செயலாளர் ரமேஷ், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் மதன்ராஜா சக்தி, ஒன்றிய துணை தலைவர்கள் சிங்கம், முருகேசன், சாந்தி, மணிமாறன், மையநாதன், அருள்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இளையான்குடியில், மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.