புதுடில்லி: செபியின் புதிய ‘எஃப் மற்றும் ஓ’ விதிகளைத் தொடர்ந்து, நவம்பர் 14 முதல், பிஎஸ்இயின் டாப்-கேப் சென்செக்ஸ் 50 மற்றும் வங்கித் துறை பங்குகளான ‘பேங்க்எக்ஸ்’ மீதான வாராந்திர குறியீட்டு ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக பிஎஸ்இ அறிவித்துள்ளது.
அதன்படி, அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஈக்விட்டி இன்டெக்ஸ் டெரிவேடிவ்ஸ்’ என்ற கடுமையான கட்டமைப்பில் குறைந்தபட்ச ஒப்பந்த அளவு அதிகரிப்பு, விருப்பத் தொகைகளை முன்கூட்டியே சேகரித்தல் மற்றும் தினசரி அடிப்படையில் நிலை வரம்புகளைக் கண்காணித்தல் ஆகியவை அடங்கும்.
இந்த நடவடிக்கைகள், முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்கும், காலாவதி நாட்களில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கும் உதவும் என்று செபி தெரிவித்துள்ளது.