Sunday, May 28, 2023
Homeஆன்மிகம்குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

கீழ்க்கண்ட பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, அமைதியின்மை, வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை, எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றை நீக்க கூடியது.

கீழ்க்கண்ட பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, அமைதியின்மை, வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை, எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றை நீக்க கூடியது.

செய்து பயன் அடையுங்கள். இதை செவ்வாய், சனி தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம், குறிப்பிட்ட நேரம், திசை எதுவும் இல்லை.

(1) ஒரு வெள்ளை துணியில் கையளவு வெல்லம், கையளவு கோதுமை (மாவு அல்ல), கையளவு கல் உப்பு, 2 செம்பு நாணயங்கள் ஆகியவற்றை சேர்த்து கட்டி வீட்டில் பூஜையறை அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து விடவும்.

கட்டி தொங்க விட அவசியமில்லை. மாதம் ஒரு முறை மாற்றி விடலாம். இது குடும்ப அமைதிக்கு சிறந்த முறையாகும். குறிப்பிட்டு கணவன் மனைவி சண்டை எனில் மேற்கூறியதில் செம்பு நாணயத்திற்கு பதில் வெள்ளி நாணயம் வைத்து விடவும். பலன் மிகும்.

(2) ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் மன அமைதி குறைவு, தெளிவின்மை, எப்போதும் சிந்தனைகள், பண விவகாரங்களில் தடை போன்றவை இருந்து கொண்டே இருக்கும், அப்படிபட்டவர்கள், ஒரு ஞாயிறு அன்று இரவு படுக்கும் முன் காய்ச்சாத பசும் பால் ஒரு ஸ்டீல் அல்லது வெள்ளி கப்பில் தன் தலைக்கு அருகில் வைத்து தூங்கி விடவும்.

பின்பு காலையில் அதை அப்படியே கொண்டு சென்று கருவேல மரத்தின் வேருக்கு விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விடவும். பாலை மூடாமல் கொண்டு செல்ல வேண்டும். மரம் அருகில் இல்லாதவர்கள் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் பாலை மாற்றி கொண்டு செல்லலாம். பாட்டிலை மூடக்கூடாது. இதை வாரா வாரம் செய்து வரலாம். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய பலன் மிகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments