1. அளவுக்கு அதிகமாக உணவை உண்ணக் கூடாது. ஏனென்றால் ஆயுள் குறையும். பசிக்கும் போது தான் அவசியம் உணவு உண்ண வேண்டும்
2. மிளகு சேர்ப்பதால் உடலில் உள்ள விஷத்தை முறித்து விடுகிறது.
3. உணவில் சீரகத்தை சேர்த்து வருவதால் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது.
4. வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டு விட்டு தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து விடும்.
5. தினந்தோறும் உணவில் கடுகு சேர்த்து வந்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை சீராக வைக்கிறது.
6. உணவில் இஞ்சியை தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம், தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஓடிவிடும்.