இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து வைப்புத் தொகை ரசீது பெற்ற குழந்தைகளில் வயது 18-ஐ கடந்தும், முதிர்வுத் தொகை வழங்கப்படாமல் உள்ள பெண் குழந்தைகளிடம் கருத்துரு பெற்று சென்னை, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திற்கு அனுப்பிட மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்கிழமை 11.07.2023 அன்று காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
குழந்தைகளின் பிறப்பு சான்று நகல்கள், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் (டீ.சி), ரேஷன் கார்டு நகல், குழந்தைகளின் தாயாருடன் இணைத்துள்ள வங்கி கணக்கு புத்தகம், குழந்தைகளுக்கும் தாயாருக்கும் ஆதார்கார்டு நகல், வைப்புத்தொகை ரசீது நகல், தாய் மற்றும் குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2, மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலக முதல் தளம், மாவட்ட ஆட்சியரக வளாகம், இராமநாதபுரம், தொலைபேசி எண் -04567 230466 இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.