இராமநாதபுரம் மாவட்டத்தில் கணினி திருத்த சிறப்பு முகாம் 04.07.2023 முதல் 08.07.2023 வரை (5 நாட்களுக்கும்) உள்வட்டஅளவில் நடைபெறுவது தொடர்பாக இராமநாதபுரம் உள்வட்டத்திற்கு இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், தேவிப்பட்டிணம் மற்றும் மண்டபம் உள்வட்டங்களுக்கு அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், பெருங்குளம் உள்வட்டத்திற்கு அந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும்.
- இராஜசிங்கமங்கலம் உள்வட்டத்திற்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், ஆனந்துார் மற்றும் சோழந்துார் உள்வட்டங்களுக்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும்.
- இராமேஸ்வரம் உள்வட்டத்திற்கு இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்,
- திருவாடானை வட்டத்திற்கு திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும், மங்களக்குடி மற்றும் தொண்டி உள்வட்டத்திற்கு அந்தந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் புல்லுார் உள்வட்டத்திற்கு புலியூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும்.
- கீழக்கரை உள்வட்டத்தில் லெட்சுமிபுரம் சமுதாய கூடம், காஞ்சிரங்குடியிலும், திருப்புல்லாணி உள்வட்டத்திற்கு வெள்ளையன் சத்திரம், திருப்புல்லாணியிலும், திருஉத்திரகோசமங்கை உள்வட்டத்திற்கு சமுதாய கூடம், திருஉத்திரகோசமங்கையிலும் கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும்.
- பரமக்குடி உள்வட்டத்திற்கு பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், போகலூர், மஞ்சூர் மற்றும் பார்த்திபனூர் உள்வட்டத்திற்கு அந்தந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், கிளியூர் உள்வட்டத்திற்கு இ-சேவை மையம், பாண்டியூரிலும், நயினார்கோவில் உள்வட்டத்திற்கு இ- சேவை மையம், நயினார்கோவிலும் கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும்.
- முதுகுளத்தூர் உள்வட்டத்தில் முதுகுளத்தூர் (வடக்கு) மேல முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், முதுகுளத்தூர் (தெற்கு) கீழ முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், தேரிருவேலி மற்றும் காக்கூரில் உள்வட்டங்களில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்திலும், கீழத்தூவல் உள்வட்டத்தில் சாம்பக்குளம் சமுதாய கூடத்திலும், மேலகொடுமலூர் உள்வட்டத்தில் அந்த கிராம இ-சேவை மையம் அலுவலகத்திலும் கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும்.கமுதி உள்வட்டத்தில் கமுதி (கிழக்கு) மற்றும் கமுதி (மேற்கு) மற்றும் அபிராமம் உள்வட்டங்களில் அந்தந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், கோவிலங்குளம் உள்வட்டத்தில் புதுக்கோட்டை குரூப், பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்திலும், பெருநாழி உள்வட்டத்தில் பெருநாழி நூலக கட்டிடத்திலும் கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும்.
- கடலாடி உள்வட்டத்தில் கடலாடி, எஸ்.தரைக்குடி, ஆப்பனூர், மேலச்செல்வனூர், சாயல்குடி மற்றும் சிக்கல் உள்வட்டங்களில் அந்தந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெறும்.
பொதுமக்கள் தமிழ்நிலத்தில் காணப்படும் மேற்கண்ட கணினி திருத்தக் கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மேற்படி முகாமில் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்