Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க சிறப்பு கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க சிறப்பு கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க சிறப்பு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

குறைகளை கேட்டறிந்த மாவட்ட உதவி ஆட்சியர்

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தலைமையேற்று 210 மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்று மனுதாரர்களின் முன்னிலையில் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தவுடன் மனுக்கள் மீது அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகின்றன. அடையாள அட்டை பெறாதவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர ஓய்வூதிய திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.இதுபோன்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு உபகரணங்கள் வேண்டுபவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்திடலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயில்வோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியுடைய பயனாளிகள் இதுபோன்ற அரசின் திட்டங்களை விண்ணப்பித்து பயன் பெற்றிட வேண்டும்.

உடல் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு திட்டம்

இதேபோல் தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் உயர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.மேலும் அவ்வப்போது மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ஊன்டுகோல், கருப்பு கண்ணாடி, காதொலி கருவி, செயற்கைகால் மற்றும் கடிகாரம் போன்ற உபகரணங்கள் அவ்வப்போது வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற சிறப்பு முகாம் மற்றும் தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம் ஆகியவற்றில் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுவதுடன் அரசின் திட்டங்களையும் பெற்று பயன்பெற்றிட வேண்டுமென உதவி ஆட்சியர் (பயிற்சி)நாராயண சர்மா,  தெரிவித்தார்.

உதவிகளை வழங்க அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து 2 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், 3 நபர்களுக்கு ஊன்றுகோள், 6 நபர்களுக்கு திறன்பேசி (SMART PHONE), 1 நபருக்கு சிறப்பு சக்கர நாற்காலி, 3 நபர்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 5 நபர்களுக்கு காதொலி கருவி என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.1,42,190/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா,  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல்,ஆனந்த சொக்கலிங்கம், கார்த்திகேயன், சுபா சங்கரி,முட நீக்கியல் வல்லுநர் ஜெய்சங்கர், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments