இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறையின் மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தர்
இந்த மருத்துவ முகாமின் நோக்கம்.
கிராம பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஆரோக்கியமுடன் இருந்திடும் வகையில் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் செய்து தலைசிறந்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிடும் வகையில் இம்முகாம் செயல்படுகிறது. உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் மிக இன்றியமையாததாகும். இன்றைய அவசர உலகத்தில் ஏதோ உடல்நிலை சரியில்லை என்றால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்ற நிலையில் இருப்பதால் உடலுக்குள் ஏற்படும் நோய் தாக்கம் அதிகரித்து இழப்பை ஏற்படுத்தும்.
இதையெல்லாம் உணர்ந்த முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது பொதுமக்களின் உடல்ஆரோக்கியத்தை பாதுகாத்திட இலவச மருத்துவ முகாம் திட்டம் துவக்கி கிராமம் முதல் நகர் பகுதி வரை அனைத்து இடங்களிலும் சிறந்த மருத்துவ வல்லுனர்களின் குழு மூலம் மருத்துவப்பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றனர்.
சிறப்பு மருத்துவர்கள் உடன் கூடிய முகாம்
இம்முகாமில் 30 சிறப்பு மருத்துவர்கள், 140 செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பணி மேற்கொண்டு உள்ளனர். தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்கு இணையாக பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோதனை இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமங்களில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வந்து மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கொள்வதுடன், தேவைப்படும் நபர்களுக்குமுதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் உயர் சிகிச்சை வழங்க உள்ளார்கள். அதுமட்டுமின்றி காப்பீடு திட்டத்திற்கான அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்து இந்த முகாமில் காப்பீடு அட்டை பெற்று பயன்பெறலாம் என இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அர்ஜுன்குமார் , இராமேஸ்வரம் நகர் மன்றத்தலைவர் நாசர்கான் , இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.