இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆர்.காவனூர் கிராமத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கால்நடைகளுக்கான இந்த சிறப்பு முகாமின் நோக்கம்.
இந்நிகழ்ச்சியில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையேற்று சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்தர்.
கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவசிகிச்சை வழங்கி கால்நடைகளை நல்ல முறையில் பாதுகாத்திட வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் இந்த சிறப்பு முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது.
இதில் கால்நடைகளுக்கான குடல்புழு நீக்க மருந்து, சினை ஊசி, மலட்டுத்தன்மை நீக்குவதற்கான ஊசி, தாது உப்பு கலவை மற்றும் கால்நடைகளுக்கு உடல் பகுதியில் ஏற்படும் நோய் தொற்றுகளை கண்டறிவதற்கான ஸ்கேன் முறையில் சிகிச்சை உட்பட கால்நடைகளுக்கான அனைத்து விதமான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 90 ஆயிரம் கால்நடைகள் மற்றும் 7இலட்சம் ஆடுகள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இந்த முகாமின் மூலம் கால்நடை வளர்ப்போருக்கு கால்நடைபல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியர் வருகைதந்து கால்நடை வளர்ப்பு குறித்து தேவையான அறிவுரைகள் வழங்கப்படுகிறது
சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி
கால்நடை அதிகளவில் வளர்த்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து 27 பயனாளிகளுக்கு ரூ.24,59,350.00 இலட்சம் மதிப்பீட்டில் சுழல் நிதி கடன்களுக்கான ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மோகன் , இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ஆவின் நிர்வாக துணைப்பதிவாளர் புஷ்பலதா, ஊராட்சி மன்றத்தலைவர் கமலா ராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், ஆவின் நிர்வாக கண்காணிப்பு அலுவலர் அண்ணாமலை , கால்நடை மருத்துவ அலுவலர்கள் நேருகுமார், மரு.சாரதா, டாபினி, ரஜினி, கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.