உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படியளப்பவர் சிவபெருமான் என்பார்கள் உயிர்கள் அனைத்துக்கும் தினமும் உணவை அளித்து காப்பாற்றும் அவருக்கு, வருடத்தில் ஒரு முறை பக்தர்கள் அனைவரும் உணவு படைத்து வழிபடும் நிகழ்வு தான் ‘அன்னாபிஷேகம்’.
இத்தினத்தின் வரலாறு
தட்சனுக்கு என்பவருக்கு 50 பெண் பிள்ளைகள். அவர்களில் அஸ்வினி முதல் ரேவதி வரையான 27 பேரை, சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். சந்திரனோ, தன்னுடைய மனைவியர்களில் கார்த்திகை, ரோகிணி ஆகி யோருடன் மட்டும் அதிக நேசம் காட்டினான்.
அதிலும் ரோகிணியிடம் அதீத அன்பு செலுத்தினான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் தங்கள் தந்தையிடம் இதுபற்றிக் கூறினர். தன் மகள்கள் அனைவரையும் ஒன்று போல் பார்க்காததால், சந்திரனின் மீது கோபம் கொண்ட தட்சன், “ஒளி பொருந்திய கலை களைப் பெற்றிருப்பதால் தான் நீ இப்படி நடந்து கொண்டாய்.
உன்னுடைய கலைகள் ஒவ்வொன்றாய் தேய்ந்து போகட்டும்” என்று சாபமிட்டார். அதன்படியே தினம் ஒரு கலையாக, சந்திரனின் கலைகள் தேய்ந்து வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த சந்திரன், தன் சாபம் நீங்க வழி தேடி அலைந்தான். இறுதியில் சிவபெருமானே கதி என்று அவரை சரணடைந்தான்.
அப்போது சந்திரன், கலைகள் பலவும் தேய்ந்து மூன்றாம் பிறையாக உருமாறி நின்றான். அவனுக்கு அடைக்கலம் தந்த சிவபெருமான், மூன்றாம் பிறை சந்திரனை தன்னுடைய தலை மீது சூடிக்கொண்டார். பின் சந்திரனை நோக்கி, “நீ உன் தவறை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாக தேயவும், பின் வளரவும் அருள்புரிகிறோம் என்றார். இருப்பினும் ஐப்பசிமாத பவுர்ணமி தினத்தில் மட்டும் உன்னுடைய 16 கலைகளுடனும் நீ மிளிர்வாய்” என்றார்.
ஐப்பசி மாத பவுர்ணமி
அதன் காரணமாகத்தான் சந்திரன், ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் மட்டும் மிகுந்த ஒளியுடன் காட்சி தருகிறான். (அறிவியல் ரீதியாக ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, பூமிக்கு அருகாமையில் சந்திரன் வருவதால், இந்த அதிக ஒளிர்வு இருப்பதாக சொல்லப்படுகிறது). இத்தகைய சிறப்புமிக்க ஐப்பசி பவுர்ணமி நாளில்தான், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே தனக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு, தன்னுடைய தானியத்தால் சந்திரன் அபிஷேகிப்பதாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.ஐப்பசி பவுர்ணமி நாள் அன்று, காலையிலேயே சிவபெருமான் அபிஷேகப் பரியர். அவருக்கு 70 வகையான மங்கலப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
அதில் முக்கியமான ஒன்றுதான். அன்னம். ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால், உலகம் முழுவதும் சுபிட்சம் பெறும் என்று சிவாகமம் கூறுகிறது. ஐப்பசி பவுர்ணமி நாள் அன்று, காலையிலேயே சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து என்றார். வழிபாடு நடைபெறும். பின்னர் சாயரட்சை பூஜை புதிய நெல் நேரமான, மாலை வேளையில், கொண்டு அன்னம் படைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்
அப்போது மறையும் அளவிற்கு அன்னத்தை சிவலிங்க திருமேனி முழுவதும் சாற்றுவார்கள். சிவபெருமானுக்கு செய்த அபிஷேகத்தினை அன்னதானமாக கோயிலில் வழங்கப்படும்.