Friday, March 29, 2024
Homeஆன்மிகம்ஐப்பசி மாத விசேஷங்கள்

ஐப்பசி மாத விசேஷங்கள்

ஐப்பசி மாத விசேஷங்கள்

  • பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறக்கிறது. 
  • ஐப்பசி மாதம் துலாம் இராசிக்குரியது. துலாம் நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் ஆதிகத்திற்குரியது.
  • காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார்.
  • காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
  • சக்தி நாயனார் குருபூஜை (18.10.22)
  • தேய்பிறை ஏகாதசி (20.10.22)

பாவம்

  • ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது. இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.
  • முருகன் சுக்ர வார விரதம் (21.10.22)
  • முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
  • சனி மகாப் பிரதோஷம் (22.10.22)
  • தேய்பிறையில் வரும் மகாப்பிரதோஷம்
  • கோவத்ச துவாதசி (21 & 22.10.22)
  • ஐப்பசிமாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது
  • தனத்திரயோதசி (22 & 23.10.22)
  • ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. திருமகளின் அருளை சேர்க்கும் நாள். இன்றைய தினம் அட்சய திருதியைக்கு சமமானது.
  • தன்வந்திரி ஜெயந்தி (22 & 23.10.22)
  • திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.
  • தீபாவளி (24.10.22)
  • ஐப்பசி மாதம், தேய்பிறை (கிருஷ்ணபட்ச) சதுர்த்தசி திதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
  • கேதார கவுரி விரதம் (24.10.22)
  • ஐப்பசி அமாவாசை அன்று கடைப் பிடிக்கப்படும் உயர்ந்த சிவ விரதம்
  • கோவர்தன தினம் (25 & 26.10.22)
  • ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும்மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார்.
  • கந்த சஷ்டி : (25.10.22 முதல் 30.10 22 வரை)
  • கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.
    30.10.22 சூரசம்ஹாரம்
    31.10.22 முருகன் திருக்கல்யாணம்
  • பூசலார் நாயனார் குருபூஜை (27.10.22)
  • வாஸ்து நாள் (28.10.22)
  • ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை (29.10.22)
  • பொய்கையாழ்வார் ஜெயந்தி (01.11.22)
  • பூதத்தாழ்வார் ஜெயந்தி (02.11.22)
  • பேயாழ்வார் ஜெயந்தி (03.11.22)
  • ஐப்பசி சதயம் : (03.11.22)
  • தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள்
  • வளர்பிறை ஏகாதசி : (04.11 22)
  • ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா” என்று அழைக்கப்படுகிறது.
  • சனி மகாப் பிரதோஷம் (05.11.22)
  • வளர்பிறையில் வரும் மகாப்பிரதோஷம்
  • திருமூல நாயனார் குருபூஜை (07.11.22)
  • நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூஜை (08.11.22)
  • ஐப்பசி பௌர்ணமி : (08.11.22)
  • சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • இடங்கழி நாயனார் குருபூஜை (09.11.22)
  • கிருத்திகை (09.11.22)
  • சங்கடஹர சதுர்த்தசி (11.11.22)
  • ஐப்பசி கடைசி நாள் (16.11.22)
  • ஐப்பசி மாத கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய புனித நீராடலை கடை முழுக்கு என்பர்.
  • 17.11.2022 – கார்த்திகை 1, முடவன் முழுக்கு, இன்று காவிரி ஆற்றில் நீராடினாலும் அதே பலன் கிடைக்கும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments