Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்திருவண்ணாமலை கிரிவலத்தின் ஆன்மீக பலன்கள்

திருவண்ணாமலை கிரிவலத்தின் ஆன்மீக பலன்கள்

  • ஆயுட் காலத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது திருக்கடையூர். சனித் தொல்லையை காக்க கூடியது திருநள்ளாறு.
  • பிணிகளை போக்குவது வைதீஸ்வரன் கோயில். ஆனால் ஊழ்வினை நீங்கி பெருவாழ்வு பெற அண்ணாமலையார் குடிகொண்டுள்ள திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதாலேயே அடைய முடியும்.
  • பிறவிப்பிணி நீங்கச் செய்யும் வல்லமை கிரிவலத்துக்கு மட்டுமே உண்டு.
  • மலை வலம் செல்ல ஒரடி எடுத்து வைத்தாலே ஓரு யாகம் செய்த பலனை பெருவோம், ஈரடி எடுத்து வைத்தால் ராஜ சூயயாக பலனை பெருவோம்.
  • மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனை பெறுவோம். நான்கடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களையும் நிறைவேற்றிய பலன் பெறுவோம் என்பது சித்தர்களின் வாக்கு.
  • உள்ளீடற்ற உன்னதமான மலையில் இருந்து சிவந்த ஜோதி கதிர்கள் எப்போதும் வெளிபடுவதை உணர்ந்து உலகுக்கு உணர்த்தியவர் மகான் ரமணர்.
  • பவுர்ணமி நாட்களில் அது பன்மடங்காக வெளிப்படுகிறது. மலைவலம் வருவோர் அதன் பயனை உணர்கின்றனர்.
  • மலைச்சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்கின்றனர் சிவனடியார்கள்.
  • மலைவலம் தொடங்கும் முன்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்னீராட வேண்டும்.
  • திருநீறு ஆணிந்து, ஒம் நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே செல்லவேண்டும்.
  • வெயிலுக்கோ, மழைக்கோ அஞ்சி குடை பிடித்து செல்வது பாவம். மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும்.
  • ராஜகோபுரத்தில் இருந்து மலை வலம் தொடங்குவது சிறப்பு. இயலாதோர் தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்யலாம்.
  • கோபம் பாவம் போன்ற எதிர்வினை உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சம நிலையில் இருக்கும்படியாக ஓருமித்த சிந்தையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.
  • ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் மலைச் சுற்ற ஏற்றதாகும். மாதப்பிறப்பு நாட்களில் மலை வலம் வருவது நல்லது.
  • மலைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.
  • தங்களின் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வது பயன்தரும்.
  • கிரிவலப் பாதையில் எம லிங்கத்தை கடந்து சென்றால் நந்திகேஸ்வரர் சன்னதி அமைந்திருக்கும். மலைச்சுற்றுவோர் தவறாமல் தரிசிக்க வேண்டி சன்னதி.
  • அதுதான் மலைச்சுற்றுவோருக்கு இறைவன் அனுப்பிய அதிகார நந்தி. மலையை ஓட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு.
  • மலைச்சுற்றி நிறைவு செய்யும்போது ஈசான்ய லிங்கத்தை தரிசித்து செல்வதே முழுப் பயனைத் தரும்.
  • மலைவலம் தொடங்கும் போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு.
  • கிரிவலம் முடித்ததும் குளிப்பதையும் உறங்குவதையும் தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments