வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்.
1. எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்றக்கூடாது.
2. காலை, மாலை இருவேளையும் ருத்ரம், சமகம் கேட்பது நல்லது.
3. வீட்டில் தெய்வத்தை வணங்கும் போது அமர்ந்தபடி வணங்க வேண்டும். நின்றபடி தெய்வத்தை வணங்கக் கூடாது.
4. வீட்டில் விரதம் இருக்கும் போது காலை நேரத்தில் உறங்குவது, வீட்டில் சண்டை இடுவது, தாம்பத்திய உறவு செய்தல் கூடாது.
5. தெய்வத்திற்கு ஏற்றிய தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
6. தீட்சை பெற்றவர்கள் விபூதியை தண்ணீரில் குழைத்து பூசலாம். மற்றவர்கள் பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது.
7. பூஜை முடிந்ததும் பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி உண்டாகும்.
8. தெய்வ படங்களை பூஜை அறையில் வடக்கு பார்த்து வைக்கக் கூடாது.
9. பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
10. வீட்டில் விளக்கு ஏற்றும் போது தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவரின் தலைக்குமேல் தேங்காயை உடைக்க கூடாது.
11. தலை குடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் ஈர துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.