Thursday, April 18, 2024
Homeராமநாதபுரம்ராமநாதபுரத்தில் தொழில் தொடங்கலாம் வாங்க

ராமநாதபுரத்தில் தொழில் தொடங்கலாம் வாங்க

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படுவதற்கு ஒன்றிய அரசின் “பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்” (PMEGP) மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மானியம்

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் அரசு மானியத்துடன் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்கலாம். இத்திட்டத்தில் தொழில் துவங்க வயது வரம்பு ஏதும் இல்லை. கல்வி தகுதி இல்லாத நபர்களுக்கு உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 இலட்சம் வரையும், சேவை தொழிலுக்கு ரூ.5 இலட்சம் வரையும் வங்கி கடன் உதவி பெறலாம்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

மேலும் எட்டாம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி அடைந்தவர்கள் உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமாக தொகையாக ரூ.50 இலட்சம் வரை, சேவை தொழிலுக்கு அதிகபட்சம் ரூ.20 இலட்சம் வரை கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்படும். இவைகள் தவிர பொது பிரிவினர் ஆண்கள் நகர் பகுதியில் தொழில் துவங்கும்பட்சத்தில் 15 சதவீதமும், கிராமப்புறத்தில் தொழில் துவங்கினால் 25 சதவீதமும், பிற சிறப்பு பிரிவனர் (பெண்கள் / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் / இதர பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் இராணுவத்தினர்/ மாற்றுத் திறனாளிகள்) நகர் பகுதியில் தொழில் துவங்கும் பட்சத்தில் 25 சதவீதமும், கிராமப்புறத்தில் தொழில் துவங்கினால் 35 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.

இணைய முகவரி

இத்திட்டத்தில் தொழில் துவங்கும் நபர்கள் 5 சதவீதம் சொந்த முதலீடாக செய்ய வேண்டும். இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இணைய முகவரியில் www.kviconline.gov.in விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தொடர்புக்கு

மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராமநாதபுரம் அவர்களை நேரிவோ அல்லது 04567-230497 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு தகுதியுடைய நபர்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments