Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு / சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020 – 2021-ம் ஆண்டு முதல் 2024 – 2025 -ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் திட்டம்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழுவின் அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் நுட்ப பயிற்சிகள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

தகுதி உள்ளவர்கள் பயனடையும் வகையில்

மேலும் தனி நபர், உணவு பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபடும் குறு / சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் பெற்று பயனடைய வழிவகை உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர்,

https://pmfme.mofpi.gov.in/ 660™m இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விபரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராமநாதபுரம். (தொலைபேசி எண். 04567 – 230591, 230497 ) என்ற முகவரியை அணுகவும். தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments