செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா ஆண்டு, கல்லூரி நிறுவனர் இ.எம்.அப்துல்லாவின் பிறந்த நாளை முன்னிட்டும் மாநில, மாவட்ட அளவிலான கைப் பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியின் தொடக்க விழாவுக்கு கல்லூரித்தாளாளர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் எம்.பெரிய சாமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரியாஸ் முகம்மது நபி பங்கேற்றார்.
மாநில அளவிலான கைப் பந்துப் போட்டிகளில் 18 அணி களைச் சேர்ந்த வீரர்களும், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி களில் 17 அணிகளைச் சேர்ந்த வீரர்களும், மாவட்ட அளவிலான பெண்கள் பிரிவு கைப்பந்து போட்டிகளில் 7 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
இதில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சென்னை புனித ஜோசப் பொறியியல் கல்லூரியும், மாவட்ட அளவிலான பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் வேலுமனோகரன் கலைக் கல்லூரியும் கோப்பையை கைப்பற்றின. கிரிக்கெட் போட் டியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி அணியும் கோப்பையை வென்றது.