பாம்பனில் புயல் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்மையில் காரணமாக தமிழகத்தில் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை
பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மாவட்ட அளவில் 50 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதால், கடலில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,700 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
இதேபோல, 100 -க்கும் மேற்பட்ட கடலோரக்கிராமங்களில் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன. மாவட்ட அளவில் சுமார் 50 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.இந்த நிலையில், மீனவர்களுக்கு தொலைவிட எச்சரிக்கை விடுக்கும் ஒன்றாம் வகையில், பாம்பன் துறைமுகத்தில் இந்த நிலையில், மீனவர்களுக்கு தொலைவிட எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டது.
பாம்பன் மக்களுக்கு எச்சரிக்கை
மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் காற்றின் வேகத்தால் கடல்கொந்தளிப்புடன் காணப்படுகிறது.கடற்கரையோரம் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் சேதமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.அந்தப் பகுதியில் உள்ள மீனவர்களைப் பாதுகாக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் தடுப்புக் கற்களை அமைக்க வேண்டும் என நாட்டுப் படகு மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.