தி.மு.க., கூட்டணியில் உள்ள தோழமை கட்சியின் அடாவடித் தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காவல் துறையினர் கடும் அதிருப்தியில் இருந்த வருவதாக கூறப்படுகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்களில் இது வரை 3 ஆயிரம் பேர் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு தோழமை கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் ஆயிரத்து 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 300 பேர் அக்கட்சியின் நிர்வாகிகள் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் முதல்வரை சந்தித்து அந்த தோழமை கட்சியில் உள்ளவர்களின் அடாவடி செயலால் தி.மு.க.,வுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்றும் அதேப்போல் கூட்டணியில் உள்ள ஒரு அமைப்பை சேர்ந்தவர்களின் ஒரு சிலரின் அரஜாக செயலால் காவல் துறைக்கு பெரிய தலைவலியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற தொடர் கதையாக இருப்பதை கண்டு கடுப்பு அடைந்த ஒரு மூத்த அமைச்சர் அவர்களை கூட்டணியில் இருந்து கழிட்டி விட்டால் தான் அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என முதல்வரிடமே தெரிவித்துள்ளதாக் கூறப்படுகிறது.
தோழமை கட்சிகளின் அடாவடி செயல்கள் குறித்து முதல்வரின் பார்வைக்கு செல்லவே, முதல்வர் ஒரே ஒரு வரியில் அவர்கள் யாராக இருந்தாலும் கவலை இல்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறை உயர் அதிகாரிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளதால் காவல் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அக்கட்சியின் தலைவரிடம் முதல்வரும் எச்சரிக்கை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் வீடுகளுக்குள் படையெடுக்கும் விஷ பாம்புகள்