Wednesday, October 4, 2023
Homeராமநாதபுரம்வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை

வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை

கீழக்கரை பகுதியில் வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கீழக்கரை கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் பெரிய கட்டுமானங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் தெரு பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைப்பது குறித்து உரிய விதிமுறைகள் பின்பற்றி கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். என உரிமையாளர்களுக்கு கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய கட்டுமான பணிகளுக்கு அரசின் விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் படி புதிதாக கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள் உரிய அரசு அனுமதி பெற்று கட்டுமான பணிகளில் ஈடுபட வேண்டும்.மேலும் விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக நகரில் அதிக உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது குறிப்பாக வணிக வளாகங்கள் உரிய அனுமதியோடு கட்ட வேண்டும்.நகராட்சி விதிமுறைகளை மீறி மிக உயரமான வணிக வளாகங்கள் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு உரியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளபடும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments