போதை ஒழிப்பது தினத்தை முன்னிட்டு காணொளி காட்சியில் முதல்வர் மு ,க. ஸ்டாலின் உறுதிமொழி ஏற்க பரமக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
காணொளி காட்சி வாயிலாக உறுதிமொழி
பரமக்குடி அரசு கலை கல்லூரியில் முதல் மட்டும் இரண்டாம் சுழற்சியில் சுமார் 1700க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று சென்னையில், போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போதை ஒழிப்பு குறித்து உரையாடினார். இதனை காணொளி காட்சி வாயிலாக பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றியவர்கள்
தமிழக முதல்வர் உறுதிமொழி எடுத்துக் கொண்டதை தொடர்ந்து, பரமக்குடி அரசு கலை கல்லூரியில் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில், முதல்வர் (பொ) சிவக்குமார் மூத்த பேராசிரியர்கள் கணேசன், அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் போதை விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துறை தலைவர்கள் கண்ணன்,ஆஷா மும்தாஜ் பேகம், தினேஷ்குமார் விஜயகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் ,காவல்த்துறையினர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் வேதியியல் துறை தலைவர் மோகன கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.