Friday, March 29, 2024
Homeராமநாதபுரம்இராமநாதபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை களை ஆய்வு கூட்டம் 

இராமநாதபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை களை ஆய்வு கூட்டம் 

இராமநாதபுரத்தில் கூட்டுறவு நூற்பாலைகளை ஆய்வு கூட்டம் 

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அச்சங்குளம் ஊராட்சியில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையினை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் தமிழ்நாடு தாட்கோ நிர்வாக இயக்குநர் கந்தசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த ஆய்வின்போது மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கூட்டுறவு நூற்பாலையில் இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் உற்பத்தி திறன் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து ஆலையின் செயல்பாடுகள் குறித்து நிர்வாக அலுவலரிடம் கேட்டறிந்தார்.

அப்பொழுது நிர்வாக அலுவலர் அறிவிப்பு

இப்பகுதியில் நேரடியாக அரசு கண்காணிப்பின் மூலம் இந்த ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து பள்ளி சீருடை வழங்கும் திட்டத்திற்கும் மற்றும் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நூல் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆலையில் இருந்து வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஆலையில் கூடுதலாக இயந்திரங்கள் மற்றும் சோலார் மின் இணைப்புகள் அமைத்து கொடுத்தால் உற்பத்தி திறனை அதிகரித்து வேலை வாய்ப்பு திறனையும் அதிகரித்திடலாம். அதற்கு சுமார் ரூ.10 கோடி வரை நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டுகளில் இந்த ஆலையின் உற்பத்தி திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

தமிழகத்தில் துவங்கப்பட்ட 5 கூட்டுறவு நூற்பாலைகளில் அச்சங்குளம் நூற்பாலையும் ஒன்றாகும். இந்த நூற்பாலை ஆதிதிராவிடர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.452.39 இலட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. இதில் தற்பொழுது 220 ஆதிதிராவிடர் தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இப்பகுதியில் வாழ்வாதாரமாக இந்த ஆலை பயன்பெற்று வருகின்றன. இப்பகுதியில் வேலை வாய்ப்பு உயர்த்திடவும், மேலும் இந்த ஆலையின் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் இருந்திடும் வகையிலும் இந்த ஆலையினை செயல்படுத்த இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் இயந்திரங்கள் பொருத்திடவும் மற்றும் சோலார் மின் இணைப்பு வழங்கிடவும் ரூ.10 கோடி தேவைப்படுவதை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று ஆலோசனைப்பெற்று, கூட்டுறவு நூற்பாலையினை விரிவு படுத்தி உற்பத்தி திறனை அதிகரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், கூட்டுறவு நூற்பாலை மேலாண்மை இயக்குநர் வஜ்ரவேல், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் உழுவை வாடைகைத் திட்டத்தின் கீழ், அரசு வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிட, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடைகைக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் விவசாயிகள் உழுதல், நிலத்தை சமன் படுத்துதல், விதை படுக்கை அமைத்தல், விதைத்தல் மற்றும் நீண்ட பள்ளம் தோண்டுதல் போன்ற பல்வேறு வகையான பண்ணை வேலைகளை உரிய நேரத்தில் முடித்திடவும், பண்ணைச் செலவுகளை குறைத்து அதிக இலாபத்தை பெற்றிடவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் மண்தள்ளும் இயந்திரம், டிராக்டர், மண் அள்ளும் இயந்திரம், சுழல்கலப்பை, 5 கொத்து கலப்பை, 9 கொத்து கலப்பை, விதைக்கும் கருவி, டிராக்டர் டிரெய்லர் மற்றும் பள்ளம் தோண்டும் கருவி, தென்னை மட்டைகளை துகள்களாக்கும் கருவி, காய்கறி நாற்று நடும் கருவி, போன்ற பல்வேறு வகையான கருவிகளை குறைந்த வாடைகையின் மூலம் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

1. டிராக்டர் (இணைப்புக் கருவியுடன்)

2. மண்தள்ளும் இயந்திரம்- மணிக்கு ரூ.500/- மணிக்கு ரூ.1230/-

3. மண்அள்ளும் இயந்திரம்- மணிக்கு ரூ.890/-

இ-வாடகை செயலி:

மேற்கண்ட வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உழவு மானியம்:

  • மேலும் சிறு/குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.250 வீதம் அதிகபட்சம் 5 ஏக்கர் அல்லது
  • 5 மணி நேரத்துக்கு அதிகபட்சமாக ரூ.1250/- ஒரு விவசாயிக்கு ஒரு தடவை மானியமாக வழங்கப்படுகிறது.

உழவன் செயலி:

மேலும் விவசாயிகள் பயன்னடுத்தி தங்களுக்கு அருகாமையிலுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் வேளாண் வாடகை மையங்களை அறிந்து கொண்டு அவர்கள் நிர்ணயித்துள்ள வாடகையில் வேளாண் இயந்திரங்களை பெற்று பயனடையலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள இராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந்துள்ள

உதவி செயற்பொறியாளர் இராமநாதபுரம் அலுவலத்திலும் (கைபேசி எண்:9865967063), பரமக்குடி, நயினார்கோயில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, சௌகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர்,

பரமக்குடி அலுவலத்திலும் ( கைபேசி எண் : 9486179544) தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments