தமிழ்நாடு முதலமைச்சர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 10.08.2023 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி,தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் 18.08.2023 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து மீனவர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள துறைகள் பயனாளிகளை ஒருங்கிணைத்து நலத்திட்டங்களை பெற்றுச் செல்ல ஏதுவாக செயல்பட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.